தள்ளுவண்டிக் கடைகளுக்கு FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் பொது இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான நடமாடும் கடைகளுக்கும் FSSAI (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
FSSAI உரிமம் இல்லாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எளிதான வழி: இந்த உரிமத்தைப் பெறுவதற்கான செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது.
தள்ளுவண்டிக் கடை விற்பனையாளர்கள் ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் இலவசமாகவே உரிமத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை விற்பனையாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், தள்ளுவண்டிக் கடை விற்பனையாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா என்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
