அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் E-Passport பெற விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் E-Passport பெற விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களும் இனி இ-பாஸ்போர்ட்களை மட்டுமே பெறுவார்கள் என்று துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் (CGI) அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
PSP 2.O என்ற இ-பாஸ்போர்ட்டை பெற அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் அக்டோபர் 28 முதல் விண்ணப்பிக்கலாம் என அமீரகத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) கூற்றுப்படி, இந்திய குடியிருப்பாளர்கள் இ-பாஸ்போர்ட்டை வாங்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. உங்கள் தற்போதைய பாஸ்போர்ட் காலாவதி தேதி வரை செல்லுபடியாகும். அதன்படி இந்த இ-பாஸ்போர்ட் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் காலாவதியான பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்படும்.
இ-பாஸ்போர்ட்டின் சிறப்பு அம்சங்கள்!
இ-பாஸ்போர்ட் (E-Passport) என்பது சாதாரண பாஸ்போர்ட்டைப் போலவே இருக்கும், ஆனால் டிரைவிங் லைசென்ஸ்,ஏடி எம் கார்டில் உள்ளதைப் போன்ற சிப் இ- பாஸ்போர்ட்டிலும் காணப்படும்.
இந்த சிப்பில், பயணிகளின் முழுமையான தகவல்கலுடன் பயோமெட்ரிக் தரவுகளும் இருக்கும். பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பிற தகவல்கள் இந்த மைக்ரோசிப்பில் சேமிக்கப்படும். இந்த சிப் மூலம் இமிகிரேஷன் கவுன்டரில் பயணிகளின் சரிபார்ப்பு பணி விரைவாக நடப்பதோடு, போலி பாஸ்போர்ட் பிரச்சனை ஒழியும் என்பது சிறப்பு.
பல நாடுகளில் இந்த பாஸ்போர்ட் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இ-பாஸ்போர்ட்டை சில நொடிகளில் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால் நீண்ட வரிசைகள் இல்லை
போலி பாஸ்போர்ட்டுகளை உருவாக்குவதை தடுக்கிறது
இந்திய இ-பாஸ்போர்ட்2024 இறுதியில் இந்திய வெளியுறவு அமைச்சகம் இ-பாஸ்போர்ட் திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து 2025ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவில் இ-பாஸ்போர்ட் பயன்பாட்டுக்கு வந்தது.
இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
புதிய இ-பாஸ்போர்ட்டை பெற
https://mportal.passportindia.gov.in/gpsp/AuthNavigation/Login
இந்த இணையதளத்தை அணுகவும்.
தங்கள் விவரங்களை நிரப்ப இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும் விண்ணப்பதாரர்கள் பழைய பாஸ்போர்ட் எண்ணை உள்ளிட்டு, ஆவணங்களை இணைத்து சரிபார்ப்பை முடித்து, விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பித்தால் செயல்முறை முடிந்து விடும்
PSP தளத்தில் உங்கள் புகைப்படம், கையெழுத்து மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்வதால் பாஸ்போர்ட் சேவை மையத்தில் அதற்காக காத்திருக்கும் நேரம் குறையும்.
Tags: வெளிநாட்டு செய்திகள்