டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தற்கொலைப் படை தாக்குதல் - என்ஐஏ அறிக்கை Delhi Car Bomb Blast
டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தற்கொலைப் படை தாக்குதல் - என்ஐஏ அறிக்கை
டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தற்கொலைப் படை தாக்குதல் என என்ஐஏ அறிக்கை மேலும் தாக்குதல் நடத்திய மருத்துவர் உமர் நபிக்கு உதவிய அமீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்தான் காரை வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவிப்பு.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இந்தச் சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்தும், சம்பவத்தற்கு அங்கிருந்தவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் தில்லி கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. மத்திய அரசும் அதிகாரப்பூர்வமாக இதனை அறிவித்தது.
இந்நிலையில், இச்சம்பவத்தை தற்கொலைப்படைத் தாக்குதல் என என்ஐஏ இன்று அறிவித்துள்ளது. மேலும், வெடித்துச் சிதறிய காரை ஓட்டிச்சென்ற உமர் முகமதுவுக்கு நெருக்கமாக செயல்பட்டு வந்த அமீர் ரஷித் அலி என்பவரையும் தில்லியில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்
