Breaking News

கோவை சம்பவத்தில் திடீர் திருப்பம் ! என்னை யாரும் கடத்தவில்லை - கணவருடனான சண்டை என்று பெண் விளக்கம்

அட்மின் மீடியா
0

கோவை சம்பவத்தில் திடீர் திருப்பம் ! என்னை யாரும் கடத்தவில்லை -கணவருடனான சண்டை என்று வீடியோ வெளியிட்டு பெண் விளக்கம்

கோவை இருகூர் பகுதியில் காரில் பெண் கடத்தப்பட்டதாக பரவிய செய்தியில் வெளிவந்த உண்மை; சிசிடிவி காட்சியில் இருந்த பெண் அளித்த விளக்கம்

கோவை இருகூரில் கடத்தபட்டதாக கூறப்பட்ட பெண் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.



கோவை மாவட்டம் இருகூர் தீபம் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கி வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்வது போல சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது 

இந்நிலையில் கோவை இருகூரில் கடத்தபட்டதாக கூறப்பட்ட பெண் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில், “நான் கணவருடன் காரில் பேக்கரிக்கு சென்று டீ குடித்துவிட்டு வந்தோம். அப்போது காரில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக காரில் இருந்து இறங்கினேன். நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவேன் என எண்ணி கணவர் வேகமாக என்னை காருக்குள் இழுத்தார். காருக்குள் இருந்த கணவர் என்னை அடித்தார். நானும் அவரை அடித்தார்” என்றார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback