Breaking News

ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் வருடத்திற்க்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

அட்மின் மீடியா
0

ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம்  வருடத்திற்க்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்கும் சேவையை உணவுத் துறை அமல்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் ரேஷன் அட்டை பெற வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கவும், திருத்தங்களைச் செய்யவும் அரசு அனுமதிக்கிறது.

இணையதளத்தின் மூலம், உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கான விண்ணப்பங்கள் செய்யலாம்.இதனை அதிகாரிகள் பரிசீலித்து ஒப்புதல் தருவர். இதுதான் நடைமுறையாக இருந்தது. 

இந்நிலையில், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கு ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் என ஆண்டுக்கு 2 முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback