இனி தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு தனியார் பேருந்துகள் செல்லாது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
இனி தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு தனியார் பேருந்துகள் செல்லாது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
கேரளாவுக்கு தமிழக தனியார் ஆம்னி பேருந்துகள் செல்லாது என தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளன.
தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டது.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இனி கேரளாவுக்கு தனியார் பேருந்துகள் செல்லாது என அறிவித்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம், இரு மாநில அரசுகளும் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
