Breaking News

நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள், கால்நடைகளை உடனடியாக அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு! Supreme Court on Street Dog

அட்மின் மீடியா
0

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனை வளாகத்தில் இருந்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Supreme Court on Street Dog

 

பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகள் விளையாட்டு வளாகங்கள் ரயில் நிலையங்கள் பள்ளி அருகே என அனைத்து இடங்களிலும் இருந்து உடனடியாக தெரு நாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.அவற்றுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடக்கூடாது அவற்றை முறையான தங்குமிடத்தில் மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது

அதேபோல் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடம், மருத்துவமனை, ரெயில் நிலையங்களில் தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும். பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் விரிவான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் தெருநாய் பிரச்சனை அதிகரித்து வருவதை தடுக்க கோரிய வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

மேலும் சாலைகளிலும் மாநிலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுற்றித் திரியும் கால்நடைகளை உடனடியாக பிடித்து அதற்கான காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback