நகைக்கடையில் முதலாளி கண்களில் மிளகாய் பொடி தூவிய பெண் அடுத்து நடந்த டுவிஸ்ட் வைரல் வீடியோ
நகைக்கடையில் முதலாளி கண்களில் மிளகாய் பொடி தூவிய பெண் அடுத்து நடந்த டுவிஸ்ட் வைரல் வீடியோ Ahmedabad: Jeweller thrashes woman who throws chilly powder at him, footage goes viral.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நகைக் கடை ஒன்றில் கடந்த 3ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணியளவில் துப்பட்டாவை வைத்து முகத்தை மூடிக்கொண்டபடி நுழைந்த பெண், கடைக்காரரின் கண்களில் மிளகாய் பொடி தூவியுள்ளார். அந்த மிளகாய் பொடி அவர் முகத்தில் சரியாகப்படவில்லை.
உடனடியாக உஷாரான கடைக்காரர் அந்த பெண்ணை கையோடு பிடித்தார். பிடித்தது மட்டுமின்றி 25 நொடிகளில் சுமார் 17 முறை அந்த பெண்ணின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்து அந்த பெண்ணை கடைக்குள் வெளியே தள்ளிய அவர் தொடர்ந்து அந்த பெண்ணை தாக்கினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரல் ஆகின்றது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1987100344774787139
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
