ஒருவரை கைது செய்தால் அதற்க்கான எழுத்துப்பூர்வ காரணங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம்
ஒருவரை கைது செய்தால் அதற்க்கான எழுத்துப்பூர்வ காரணங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம்
எந்தவொரு குற்றச்சாட்டின் பேரிலும் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், அதற்கான காரணங்களை கைதுக்கு முன்போ அல்லது உடனடியாகவோ எழுத்துப்பூர்வமாக வழங்குவதை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றத்தின் தன்மை அல்லது சம்பந்தப்பட்ட சட்டத்தின் தன்மை எதுவாக இருந்தாலும், எழுத்துப்பூர்வமாக அவர்கள் (குற்றம் சுமத்தப்பட்டவர்கள்) புரிந்து கொள்ளும் மொழியில் வழங்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் எந்தவொரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபராக இருந்தாலும், அவரது கைதுக்கான காரணங்களை கட்டாயம் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த உத்தரவை மீறினால், அந்த கைது சட்டவிரோதமாகும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
