Breaking News

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!! எச்சரிக்கும் செபி

அட்மின் மீடியா
0

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!! எச்சரிக்கும் செபி

டிஜிட்டல் கோல்டு என்பது உடல் வடிவம் இல்லாத தங்கத்தை மின்னணு முறையில் வாங்குவது மற்றும் சேமிப்பதாகும். இது குறைந்தபட்சம் ரூ. 10 போன்ற சிறிய தொகையில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது மற்றும் நம்பகமான நிறுவனங்களால் பாதுகாக்கப்படும் தங்கத்தில் முதலீடு செய்ய உதவுகிறது. இது தங்கத்தின் மதிப்பை பிரதிபலிக்கும் ஒரு பாதுகாப்பான, டிஜிட்டல் முதலீடாகும், 


ஆனால் செபி அமைப்பு இதை இன்னும் ஒழுங்குபடுத்தவில்லை என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பத்திரங்கள் அல்லது சரக்கு (Commodity) வர்த்தகப் பொருட்களின் கீழ், டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை, அவை SEBI அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வராது என பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. 

செபி தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் ,பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் கோல்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள் என கூறியிருக்கிறது .


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback