Breaking News

கோவை அருகே பயங்கரம் காதலனை தாக்கி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - முழு விவரம்

அட்மின் மீடியா
0

காதலனை தாக்கி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - கோவை அருகே பயங்கரம்

கோவை மாவட்டத்தில் விமான நிலையம் அருகே இரவு 11 மணி அளவில் தனது நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த 19 வயது பெண் மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்

பெண்ணின் நண்பரை அரிவாளை கொண்டு தாக்கி விட்டு இளம்பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு (நவ.,02) தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் மாணவியை கடத்த முயற்சி செய்தனர். இதையடுத்து மாணவியின் ஆண் நண்பர், 3 பேரிடம் இருந்து காப்பாற்ற போராடி உள்ளார்.ஆனால் மாணவியின் ஆண் நண்பரை தாக்கி, மயக்கம் அடைய செய்துவிட்டு, கடத்தி சென்றனர். 

அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, 3 பேரும் தப்பி சென்றனர். பின்னர் மாணவியின் ஆண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பீளமேடு போலீசார்  விரைந்து சென்று மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த இளைஞரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.போலீசார் விரைந்தனர். இது தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்

தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback