ரயில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஆதார் கட்டாயம்! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு
ரயில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஆதார் கட்டாயம்! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு காலை 8 மணி முதல் 10 மணி வரையிலான இரண்டு மணி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ஆதார் அங்கீகாரம் (Aadhaar authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை மட்டுமே பயன்படுத்தி ஐஆர்சிடிசி கணக்கை உருவாக்க முடிந்தது.இதனால் ஒரே நபர் பல கணக்குகளை உருவாக்கி மொத்தமாக டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய முடிந்தது.
அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் கூட ஆரம்ப கால டிக்கெட்டுகளை எளிதில் பதிவு செய்ய முடிந்தது.இது டிக்கெட் கறுப்புச் சந்தை வணிகம் செழிக்க வழிவகுத்தது.ஆதார் இணைக்கப்படாத பயணிகள், இந்த 8-10 மணி நேரத்திற்குப் பிறகு தங்கள் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யலாம்.இந்த புதிய விதி ஆன்லைன் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.கவுன்ட்டர்களில் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு எந்த மாற்றமும் இல்லை.
Tags: தமிழக செய்திகள்
