வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்க்கு மழை பாதிப்பா? முழு விவரம்
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்க்கு மழை பாதிப்பா? முழு விவரம்
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ந்தேதி தொடங்கியதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான முதல் கனமழை வரை பதிவாகி வந்தது. இதன் தாக்கமாக, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை கடந்த அக்டோபர் 26-ந் தேதி ‘மோந்தா’ என்ற பெயரில் புயலாக வலுப்பெற்று,
அது ஆந்திர மாநிலம் காக்கிநாடா நோக்கி நகர்ந்து, அக்டோபர் 28-ந் தேதி மாலை 6 மணியளவில் அங்கு கரையை கடந்து சென்றது.
இந்நிலையில், வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மியான்மர் கடலோரம் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது மியான்மர் நோக்கி நகரும் என்பதால், தமிழகத்தில் இதனால் குறிப்பிடத்தக்க மழை பாதிப்பு ஏற்படாது என வானிலை மையம் விளக்கியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
