பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு தலைகீழாக கவிழ்ந்த கார் வைரல் வீடியோ
உதகையில் பெட்ரோல் பங்க் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் பறந்து விழுந்த கார்.காரை ஓட்டி வந்தவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஹில்பங்க் பகுதியில் உள்ள பிரபல பெட்ரோல் பங்கிற்குள் வேகமாக நுழைந்து, இரும்புத்தடுப்புகளை இடித்து, அதன் மேல் அந்தரத்தில் பறந்து ரோகிணி நெடுஞ்சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தலைகீழாக கவிழ்ந்த காரில் சிக்கியிருந்த ஓட்டுநர் சுரேஷை மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/bbctamil/status/1990073277490860036
Tags: தமிழக செய்திகள்
