Breaking News

சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பின்னடைவு காலிபணியிடம்(Backlog Vacant) 4 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம்/நகராட்சி வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை இனசுழற்சி குறித்த விவரம், மாதிரி விண்ணப்ப படிவம் திருப்பத்தூர், கந்திலி, நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் / ஆம்பூர் நகராட்சியில் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். இப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பபடிவத்தினை http://www.tirupathur.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். அவ்வாறு பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு முதலில் ரூ.3000/-தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 Level of Pay-ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும்.

இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது நிர்ணயம்/இதர தகுதிகள் அனைத்தும் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

வயது வரம்பு

21 முதல் 40 வரை (பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்)

18 முதல் 40 வரை (பழங்குடியினர்)

20 முதல் 40 வரை (விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்)

குறைந்தபப்பட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தோல்வி/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும் (ஊராட்சி -குக்கிராமம் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை). -வருவாய் கிராமம் போன்றவைகள்

மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு கீழ்கண்ட குறைபாடு உள்ளவர்கள் மட்டும் (உரிய அடையாள அட்டையுடன்) விண்ணப்பிக்க வேண்டும். (பெணகள் மட்டும்)

குறைவான பார்வை திறன்( மூக்குக்கண்ணாடி மூலம் பார்வை முழு பார்வை சரிசெய்யப்பட்டது)

உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்)

குணப்படுத்தப்பட்ட தொழு நோய் (40 சதவீதம் கைகளின் முழு செயல்பாட்டு திறன் உணர்திறன் மற்றும் செயல் திறன் உள்ளடக்கியது)

திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்

குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு (மிதமான)

விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தனை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்/நகராட்சி அலுவலகத்தில் 11/11/2025 முதல் 25/11/2025 மாலை 5.45 மணிக்குள் அளிக்கப்படல் வேண்டும்.

அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளபட மாட்டாது. விண்ணப்பத்துடன், பள்ளி மாற்றுச் சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, ஆதார் அட்டை, சாதிச் சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை/ சான்றிதழ் நகல்கள் இணைக்க வேண்டும். அஞ்சல் துறையின் மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படுடம் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது சான்றிதழ்களுடன் கலந்த கொள்ள வேண்டும். அசல்

வேறு அலுவலகங்களிலோ மற்ற அலுவலர்களிடமோ, மின்அஞ்சல், புலனம், இணையவழி மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையினை இரத்து செய்வதற்கும், திரும்ப பெறுவதற்கும், திருத்துவதற்கும், கெடு தேதியினை நீட்டிப்பதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு முழு உரிமை உண்டு.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 

25.11.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2025/11/17628430792770.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback