பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக கூட்டணி முழு விவரம் இதோ Bihar Election 2025
பீகார் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட முன்னிலை பெற்றது NDA கூட்டணி Bihar Election 2025
பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நிறைவடைந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. Bihar voting result 2025
மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில், முதல் கட்டமாக கடந்த 6ம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 11ம் தேதி நடைபெற்றது.
பீகார் சட்டசபையில் ஆட்சியை அமைக்க 122 இடங்கள் தேவைப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. - தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பீகார் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட முன்னிலை பெற்றது NDA கூட்டணி.
தேர்தல் ஆணையத்தின் நிலவரப்படி,
Janata Dal (United) - JD(U) 84 இடங்களில் முன்னிலையில் உள்ளது
Bharatiya Janata Party - BJP 94 இடங்களில் முன்னிலையில் உள்ளது
Rashtriya Janata Dal - RJD 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது
Lok Janshakti Party (Ram Vilas) - LJPRV 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM 6 இடத்தில் முன்னிலையில் உள்ளது
Hindustani Awam Morcha (Secular) - HAMS 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது
Indian National Congress - INC 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது
Rashtriya Lok Morcha - RSHTLKM 4 இடத்தில் முன்னிலையில் உள்ளது
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L) 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது
Communist Party of India (Marxist) - CPI(M) 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது
Bahujan Samaj Party - BSP 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
