ஆந்திராவில் ஆசிரியைக்கு கால் பிடித்துவிட்டு மசாஜ் செய்த மாணவிகள் வைரல் வீடியோ Andhra Teacher
ஆந்திராவில் ஆசிரியைக்கு கால் பிடித்துவிட்டு மசாஜ் செய்த மாணவிகள் வைரல் வீடியோ
பள்ளியில் மாணவிகள் ஆசிரியைக்கு கால் பிடித்துவிட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மெலியபுட்டி மண்டலத்தில் உள்ள பந்தப்பள்ளி பெண்கள் பழங்குடி ஆசிரமப் பள்ளியில், இரண்டு மாணவிகளை ஆசிரியை ஒருவர் கால் பிடித்துவிட சொல்லியுள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் கூலாக காலை டேபிளில் போட்டு அமர்ந்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது
வீடியோ வைரல் ஆன நிலையில் அந்த ஆசிரியர் சுஜாதா என அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து, சிதம்பேட்டை ஐடிடிஏ திட்ட அதிகாரி பவார் ஸ்வப்னில் ஜகன்னாத் விசாரணை நடத்தி அந்த ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1986089599022838076
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
