திருமணம் ஆன 5 மாதங்களில் கொடூர மரணம் - திருவாரூர் அருகே சாலை விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகிய நிலையில் ஓட்டுநர் உடல் மீட்பு
திருமணம் ஆன 5 மாதங்களில் கொடூர மரணம் திருவாரூர் அருகே சாலை விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகிய நிலையில் ஓட்டுநர் உடல் மீட்பு
திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் கருகிய நிலையில் ஓட்டுநர் உடல் மீட்பு.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் அதிவேகமாக சென்ற கார், சாலை தடுப்புச் சுவர் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில், கார் தீப்பிடித்து கொயழுந்துவிட்டு எரிந்தது. இதில், விபத்தில் சிக்கிய கார் ஓட்டுனர் உடல் கருகி உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காரில் இருந்து உடல் கருகிய நிலையில் ஓட்டுனரின் உடலை மீட்டனர்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருத்துறைப்பூண்டி போலீசார், காரை ஓட்டி வந்தவர் யார் என மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் உயிரிழந்தது திருவாரூரைச் சேர்ந்த ரபீக் என்பது தெரியவந்துள்ளது. திருமணமாகி 5 மாதங்களே ஆன இவர், புதுக்கோட்டையில் மனைவியை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் விபத்து நடந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
