Breaking News

மாசம் 47250/- ரூபாய் சம்பளம் - 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு துபாயில் வேலைவாய்ப்பு..! தமிழக அரசு அறிவிப்பு dubai job vacancy for indian

அட்மின் மீடியா
0

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு துபாயில் வேலைவாய்ப்பு..! தமிழக அரசு அறிவிப்பு dubai job vacancy for indian

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஒரு வருட பணி அனுபவத்துடன் 22 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு Electrician, Plumber, Mason, Fitter, Painter, Labour போன்ற பணிகளுக்கு வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 

ஐக்கிய அரபு (துபாய்) அமீரகத்தில் பணிபுரிய 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் ஒருவருட பணி அனுபவத்துடன் 22 முதல் 45 வயதிற்கு உட்பட்ட, 

Electrician பணிக்கு மாத வருமானம் ரூ.47,250/-, 

Plumber பணிக்கு ரூ.47,250/-

Mason பணிக்கு ரூ.47,250/-,

Fitter பணிக்கு ரூ.47,250/-,

Painter பணிக்கு ரூ.44,100/-

Labour பணிக்கு ரூ.29,900/ -வழங்கப்படும். 

மேலும் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம் (Resume, Qualification Certificate, Experience Certificate, Passport original & copy) & Photo ஆகியவற்றை 07.11. 2025-க்குள் அனுப்பவும்.

இப்பணிகளுக்கான நேர்காணல் 8.11.2025 அன்று காலை 8.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் (Resume, Qualification Certificate, Experience Certificate, Passport original & copy, Aadhar and Photo) ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அனுகவும்:

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருவெறும்பூர்: 620014, திருச்சி மாவட்டம்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) &வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://omcmanpower.tn.gov.in/current-openings?page=1

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback