Breaking News

டெல்லி குண்டுவெடிப்பில் எந்த தொடர்பும் இல்லை. 3 மருத்துவர்கள் உட்பட 4 பேரை விடுவித்த NIA Red Fort blasts case: No evidence found; NIA releases 3 doctors

அட்மின் மீடியா
0

டெல்லி குண்டுவெடிப்பில் எந்த தொடர்பும் இல்லை. 3 மருத்துவர்கள் உட்பட 4 பேரை விடுவித்த NIA Red Fort blasts case: No evidence found; NIA releases 3 doctors



டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விடுவித்துள்ளது. முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் உன் நபியுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று புலனாய்வாளர்கள் கண்டறிந்ததை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது

அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.டெல்லி சம்பவத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த திங்கள்கிழமை மாலை  டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) கைது செய்தது.

அதில் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் ரெஹான், முகமது மற்றும் முஸ்தகிம் ஆகிய மூவர் மற்றும்  உர வியாபாரி தினேஷ் சிங்கிளா ஆகிய 4 பேரையும் 3 நாள் தொடர் விசாரணைக்குப் பிறகு நேற்ற்ய் NIA இறுதியாக விடுவித்தது.

டெல்லி குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி மருத்துவர் உமர் உன்-நபியுடன் அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன

ஆனால் டெல்லி சம்பவத்திற்கும் அவர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback