சினிமா தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் முழு விவரம்
சினிமா தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்கள் முழு விவரம்
சென்னை எழும்பூரில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது அக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் முக்கியமாக, முன்னணி நடிகர்கள் இனி படங்களுக்கு நிரந்தர சம்பளம் பெறாமல், வியாபார பங்கீட்டுத் திட்டத்தில் (profit-sharing model) மட்டுமே நடிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, ரஜினிகாந்த், அஜித், தனுஷ், சிம்பு, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின் வணிக வெற்றி, நஷ்டத்தில் பங்கு பெற வேண்டும்
மேலும் நடிகர்கள், இயக்குநர்கள், முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் வெப் சீரிஸ்களை தவிர்த்து திரைப்படங்கள் மீது கவனங்கள் செலுத்த வேண்டும்,
ஆன்லைன் டிக்கெட் விற்பனையை தமிழ்நாடு அரசே நடத்த வேண்டும்
விமர்சனம் என்ற பெயரில் வரம்பு மீறி செயல்படும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நடிகர்களை வைத்து தனியார் அமைப்புகள் நடத்தும் விருது நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெற வேண்டும்,
முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்
