Breaking News

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி - பள்ளிக் கல்வித்துறை

அட்மின் மீடியா
0

 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி - பள்ளிக் கல்வித்துறை



தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (நவம்பர் 4) வெளியிட்டார். 

அப்போது தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பில் அறிவியல் இல்லாத பாடப்பிரிவு தேர்வு செய்து படிக்கும் மாணவர்களுக்கு கணக்கு பதிவியல் (அக்கவுண்ட்ஸ்) பாடம் இடம்பெறுகிறது. 

வழக்கமாக இப்பாடத்திற்கான தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி கிடையாது. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டில் முதன்முறையாக கணக்கு பதிவியல் பாடத்தில் கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பார்க்க Tamil Nadu Public Exam Time Table 2026

https://www.adminmedia.in/2025/11/10-12-tamil-nadu-public-exam-time-table.html

பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் இதனை அறிவித்தார். அதன்படி, இந்த முறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த செய்தி கணக்கு பதிவியல் பாடத்தை தேர்வு செய்து எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback