Breaking News

1 லட்சத்திற்க்கும் மேல் உள்ள உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு! வைரல் வீடியோ world's largest spider web

அட்மின் மீடியா
0

1 லட்சத்திற்க்கும் மேல் உள்ள உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு! வைரல் வீடியோ world's largest spider web


ருமேனிய விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ்-அல்பேனியா எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் இந்த ராட்சத வலையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குகைகளின் நுழைவாயில் கிரீஸ் நாட்டில் தொடங்கும் நிலையில், அவை அண்டை நாடான அல்பேனியாவரை நீள்கின்றன.துவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி வலைகளிலேயே இதுதான் மிகப்பெரியது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.



அந்த 106 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வலையில் ‘ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும் இரண்டு சிலந்தி இனங்கள் (பார்ன் ஃபனல் வீவர் மற்றும் ஷீட் வீவர்) இங்கு ஒரே வலையில் சமாதானமாக வாழ்ந்து வருவது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது

ஷீட் வீவர் போன்ற அளவில் சிறிதாக உள்ள சிலந்திகளையே ஃபார்ன் ஃபனல் வீவர் இனச் சிலந்திகள் உணவாகக் கொள்ளும் எனக் கூறப்படும் நிலையில், அவை இரண்டும் சேர்ந்து வாழ்வது ஆய்வாளர்களை வியக்கவைத்துள்ளது

கொசுக்களைப் போன்ற சிறு பூச்சிகள் அல்லது ஈக்கள் அந்தச் சிலந்திகளுக்கு உணவாகக் கிடைப்பதால் அவை குகையைவிட்டு வெளியேற வேண்டிய தேவை ஏற்படவில்லை.



கிரீஸ் மற்றும் அல்பேனியா நாடுகளின் எல்லையில், 1,140 அடி உயரத்தில் இருக்கும் அந்த குகையை ஆய்வு செய்தபோது இந்த அதிசயத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் இஸ்த்வான் உராக் இது குறித்து கூறுகையில், "அந்த வலையைக் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட பிரமிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது, நேரில் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்" என்று அவர் கூறியிருக்கிறார்.இந்த சிலந்தி வலையின் பிரமாண்டத்தைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1987562936349716990

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback