Breaking News

ஜியோ sim கார்டு வைத்துள்ளவர்களுக்கு, 35,100 ரூபாய் மதிப்பிலான கூகுள் ஜெமினி ஏ.ஐ. முற்றிலும் இலவசம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஜியோ sim கார்டு வைத்துள்ளவர்களுக்கு, 35,100 ரூபாய் மதிப்பிலான கூகுள் ஜெமினி ஏ.ஐ. முற்றிலும் இலவசம் முழு விவரம்


ஜியோ 5ஜி பயனர்களுக்கு, 35,100 ரூபாய் மதிப்பிலான கூகுள் ஏ.ஐ., ப்ரோ உள்ளிட்ட சில வசதிகள், 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

முதற்கட்டமாக 18 - 25 வயதுடைய ஜியோ அன்லிமிடெட் 5ஜி திட்ட சந்தாதாரர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தச் சலுகையை MyJio ஆப் வழியாக எளிதாக ஆக்டிவேட் செய்யலாம். 

இந்த சேவையை பெற மைஜியோ ஆப்பில் "Claim Now" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்

ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 

ஜெமினி ஆஃப்-ல் கூகுளின் மிகவும் திறன் வாய்ந்த ஜெமினி 2.5 ப்ரோ (Gemini 2.5 Pro) மாடலுக்கான உயர்தர அணுகல், 

அதிநவீன நானோ பனானா (Nano Banana), வியூ 3.1 (Veo 3.1) மாடல்களைப் பயன்படுத்தி அற்புதமான படங்கள்/வீடியோக்களை உருவாக்கும் அதிக லிமிட், 

படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்குரிய நோட்புக் LM-க்கான விரிவாக்கப்பட்ட அணுகல், 

2 TB கிளவுட் சேமிப்பகம் மற்றும் பல சலுகைகள். 

முதற்கட்டமாக, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட, அன்லிமிடெட் 5G பிளானில் உள்ள பயனர்களுக்கு இது வழங்கப்படும். மிக விரைவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback