சவுதி அரேபியாவில் பழமைவாய்ந்த கஃபாலா முறை ரத்து - தொழிளார்கள் மகிழ்ச்சி Saudi Arabia abolishes Kafala system
சவுதி அரேபியாவில் பழமைவாய்ந்த கஃபாலா முறை ரத்து - தொழிளார்கள் மகிழ்ச்சி Saudi Arabia abolishes Kafala system
சவுதி அரேபியாவில் பழமைவாய்ந்த கஃபாலா அமைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 23லட்சம் இந்தியர்கள் உட்பட 1.3கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
கஃபாலா அமைப்பு
கஃபாலா அமைப்பு அல்லது கெஃபாலா அமைப்பு அரபு மொழியில் niẓām al-kafāla அதாவது ' ஸ்பான்சர்ஷிப் சிஸ்டம் என்று அழைக்கப்படுகின்ரது
இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு நாட்டில் வசிக்கும் காலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட முதலாளியுடன் பிணைப்பதை உள்ளடக்கியது. இது தற்போது பல அரபு நாடுகளில் , குறிப்பாக அரேபிய தீபகற்பத்தில் உள்ள நாடுகளில் உள்ளது ,
பொதுவாக அவர்களின் முதலாளி, அவர்களின் விசா மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்.
சவுதி அரேபியாவில் சுமார் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த கஃபாலா முறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்த முறையில் முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு இருந்தனர்.
ஒரு தொழிலாளி வேலையில் இருந்து வேறு இடத்துக்கு மாறலாமா, நாட்டைவிட்டு வெளியேறலாமா அல்லது சட்ட உதவியை நாடலாமா என்பதை முதலாளிகள் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு உள்ளூர் ஸ்பான்சர் அல்லது கஃபீலுடன் பிணைக்கப்பட்டார். தங்களது ஸ்பான்சரின் ஒப்புதல் இல்லாமல் தொழிலாளர்கள் வேலைகளை மாற்றவோ, நாட்டைவிட்டு வெளியேறவோ அல்லது புகார்களை கூட பதிவு செய்யவோ முடியாது.
இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக கஃபாலா அமைப்பு ரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது
Tags: மார்க்க செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
