Google Pay, PhonePe வரிசையில் ‘Zoho Pay’ செயலி அறிமுகம்!
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த மென்பொருள் சேவை நிறுவனம் Zoho, தொழில்நுட்ப சேவைகளில் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. அதன்பொறுப்பாக, புதிய நுகர்வோர் கட்டணச் செயலி ‘Zoho Pay’ அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும் இது அரட்டை (Arattai) தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு வரும்; மேலும் புதிய POS சாதனங்கள் மற்றும் நிதி மென்பொருள் சேவைகளும் Zoho வழங்கவுள்ளது.
அக்டோபர் 22, 2025 அன்று Zoho Pay தனி செயலியாகவும், அரட்டை தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் வெளியியாகயுள்ளது.
இது குறித்து Zoho Payments Tech நிறுவனத்தின் CEO சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் கூறுகையில், "Zoho Pay பயனர்களுக்கு பாதுகாப்பான கட்டண அனுபவத்தையும், தடையில்லா பரிவர்த்தனைகளையும் வழங்கும் என கூறியுள்ளார்
Tags: தமிழக செய்திகள்
