நாமக்கல் தனியார் கல்லூரியில் உணவு உண்ட மாணவர்கள் உயிரிழந்ததாகப் பரவும் பொய்யான வதந்தி செய்தியினை நம்பாதீர்கள் ! உண்மை என்ன முழு விவரம்
நாமக்கல் தனியார் கல்லூரியில் உணவு உண்ட மாணவர்கள் உயிரிழந்ததாகப் பரவும் வதந்தி !'
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அமைந்துள்ள எக்செல் கல்லூரியின் விடுதிகளில் தங்கியிருந்த மொத்தம் 128 மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக கல்லூரி மருத்துவ மையம் மற்றும் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மாணவர்களும் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மாணவர்கள் சிலர் இறந்துவிட்டார்கள் என வதந்தி பரவியது
இது குறித்து தமிழக அர்சின் தகவல் சரிபார்ப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
நாமக்கல் தனியார் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால் 27.10.2025 மற்றும் 28.10.2025 ஆகிய இரு நாட்களில் பாதிக்கப்பட்ட 128 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மேலும் உணவு தயாரிக்கும் இடம் மற்றும் பொருட்களைச் சீர் செய்து சுத்தப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது' என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்கள் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே.வதந்தியைப் பரப்பாதீர்!
மேலும் இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக(OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு "Pokkiri_Victor (@Pokkiri_Victor)" o "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீதுசட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
