திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால் உயிரிழந்தார் முழு விவரம்
திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மாரடைப்பால் உயிரிழந்தார் முழு விவரம்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி. இவருக்கு வயது 74. இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இவர் 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில், பொன்னுசாமி சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.பொன்னுசாமி அவர்கள் மறைவெய்தியதையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் திரு. கு.பொன்னுசாமி அவர்கள் மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அத்தொகுதி மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
கழகத்தின் மீது தீவிரப் பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீதும் என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்த அவர், நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.
அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
