Breaking News

பாமகவின் புதிய செயல் தலைவர் ராமதாஸ் புதிய அறிவிப்பு...!

அட்மின் மீடியா
0


ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.



ஆனால் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார்.அவரை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கட்சியின் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தர்மபுரியில் இன்று (அக்., 25) நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், பாமகவின் செயல் தலைவர் என்று பொறுப்பை உருவாக்கினேன். அந்த பதவிக்கு தகுதி இல்லை என்று கூறி ,அதனை ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.எனவே அந்தப் பொறுப்பை என்னுடைய மூத்த மகள் காந்திமதி பரசுராமனுக்கு வழங்குகிறேன் எனக்கும் பாமகவிற்கும் பாதுக்காப்பாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback