Breaking News

வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக மாற வாய்ப்பு

அட்மின் மீடியா
0

வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - புயலாக மாற வாய்ப்பு



தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அக்டோபர் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு உருவாகியிருக்கும் இரண்டாவது புயல் சின்னம் இதுவாகும்.இந்த வாரத் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்துக்கு இடையே வலுவிழந்து கரையைக் கடந்தது.

இந்த நிலையில், மீண்டும் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதால், அடுத்த 4 நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இன்று 24  ம்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை பெய்யவாய்ப்புள்ளது. மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை

25-10-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

27-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

28-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback