Breaking News

என்ன கொடுமை சார் இது - ரயிலில் கொட்டாவி விட்டபோது லாக் ஆன தாடை - மருத்துவர் அளித்த சிகிச்சை வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ரயிலில் கொட்டாவி விட்டபோது லாக் ஆன தாடை - மருத்துவர் அளித்த சிகிச்சை வைரல் வீடியோ

கொட்டாவி விட்ட போது தாடை எலும்புகள் சிக்கி கொண்டதால், வாயை அடைக்க முடியாமல் போன ரயில் பயணிக்கு அவசர சிகிச்சை வழங்கி சரி செய்த ரயில்வே மருத்துவர்கள்..

கன்னியாகுமரி-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று  பயணிகளை ஏற்றிக்கொண்டு பாலக்காடு வழியே சென்று கொண்டிருந்த போது அதே ரயிலில் வட மாநிலத்தை சேர்ந்த பயணி கொட்டாவி விட்ட போது அவரால் மீண்டும் வாயை மூடவே முடியவில்லை 

ரயிலில் இருந்த ரயில்வே காவலர்கள் உடனடியாக மருத்துவருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர் விரைந்து வந்த மருத்துவர் அளித்த சிகிச்சையால் அந்த பயணியின் தாடை இயல்பு நிலைக்கு திரும்பியது. 

இதையடுத்து, அவர் மருத்துவரை கையெடுத்து கும்பிட்டி நன்றி தெரிவித்தார்.

பயணியின் இந்த வீடியோவை, தெற்கு ரயில்வே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட்டுள்ளது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1979854457585459214

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback