அ.தி.மு.க.-பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை - த.வெ.க. திட்டவட்டம் இணை பொதுச்செயலர் பேட்டி முழு விவரம் இதோ
அ.தி.மு.க.-பா.ஜ.வுடன் கூட்டணி இல்லை - த.வெ.க. திட்டவட்டம் முழு விவரம் இதோ
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தேர்தல் சின்னம் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை பனையூரில் நேற்று நடந்த, த.வெ.க., உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்திற்கு பின், த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் அளித்த பேட்டியில்
இன்றைய கூட்டத்தில் கட்சிப் பணிகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்தோம். பல்வேறு விஷயங்கள்குறித்து விவாதித்துள்ளோம். அதுகுறித்து எங்கள் தலைவர் முடிவெடுத்து அறிவிப்பார்.
விஜய்யின் மக்கள் சந்திப்பு பிரசார பயணம் தொடரும். அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். எவ்வளவு பெரிய நெருக்கடி வந்தாலும் எதிர்கொள்வோம். விஜய்யின் ஆறுதல் சந்திப்பு தனிப்பட்டது. அரசியலாக்க விரும்பவில்லை.
கரூர் சம்பவத்திற்கு பின், கட்சி நிர்வாகிகள் யாரும் தலைமறைவாகவில்லை. நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வந்தோம். இந்த சம்பவத்திற்கு பிறகு கட்சியை முடக்க வேண்டும் என நினைத்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு வாயிலாக, அவர்களின் முயற்சிகள் தவிடு பொடியாகி விட்டன. எங்களை யாரும் தடுக்க முடியாது. எங்கள் கட்சியும், தலைவரும், இதைவிட பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மனநிலைக்கு தயாராகி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இருந்த நிலைப்பாட்டில் தான் இப்போதும் இருக்கிறோம் என்றார்.
Tags: அரசியல் செய்திகள்
