சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் முழ் விவரம்
சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமா?
18 முதல் 50 வயதிற்குள் இருப்பவரா?
பத்தாம் வகுப்பு வரை படித்தவரா?
சென்னையில் வசிப்பவரா?
சென்னை பெருநகர காவல் துறையுடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு!
நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பியங்கள்...
இது குறித்து வெளியான செய்தி குறிப்பில்:-
சென்னை பெருநகர ஊர்க்காவல்படை - ஊர்காவல்படையினர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விருப்பமுள்ள இளமையும், ஊக்கமும் அர்ப்பணிப்பு பண்பும். பொதுநலத்தொண்டில் ஈடுபாடு கொண்டு சேவை செய்ய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
2. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
3. 01.10.2025 அன்று 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்ச்சி செய்யப்படும் ஊர்க்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.
இரவு ரோந்து பணி பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் இலவசமாக பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.11.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.
முகவரி:
சென்னை பெருநகர ஊர்க்காவல்படை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை,சென்னை-15
A : 9566776222, 74186 81700
Invitation for Applications for the post of Home Guards - Greater Chennai Home Guards.
Applications are invited from both men and women to join the Greater Chennai Home Guards Service. The Greater Chennai Home Guards invites Applications from young, energetic, dynamic individuals those who are dedicated to Public service for appointment as Home Guards.
Eligibility Criteria:
1. Applicants must possess good conduct with no criminal records.
2. Applicants must be resident of Chennai City.
3. Applicants must be above 18 years and below 50 years of age as on 01.10.2025.
4. Applicant's educational qualification must be 10th std pass or fail.
The selected Home Guards will be trained for 45 days (one-hour daily training). After completion of the training, they will be deployed to a Police Station to assist the police in their respective areas.
For every Callout such as night duty, day patrol, traffic regulation etc., they will be paid Rs.560/as special allowance.
The applicants who are eligible on the above criteria can get a free application from below mentioned address and send the filled-up applications to the same address by post or in person on or before 30-11-25 at 17.00 Hrs.
Address:
Greater Chennai Home Guard office,
J1 Saidapet Police station complex, Anna salai, Saidapet, Chennai-15
Contact No. : 95667 76222, 74186 81700.
Tags: தமிழக செய்திகள்
