Breaking News

தமிழக வெற்றிக்கழகம் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழகம் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல - தேர்தல் ஆணையம்



நடிகர் விஜய் தலைமையிலான "தமிழக வெற்றி கழகம்" (தவெக) கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்

இந்த வழக்கின் விசாரணையின்போது, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியை எப்படி ரத்து செய்ய முடியும் என ECI தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், இந்த வழக்கில் TN அரசு, DGP பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

இந்த கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றாலும், அங்கீகாரம் பெறவில்லை என்பது நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback