வந்துவிட்டது வாட்ஸ் அப்புக்கு போட்டியாக தமிழத்தின் அரட்டை ஆப் உடனே இன்ஸ்டால் செய்யுங்க Arattai Chat and Calling app
வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் போன்ற மேசேஜிங் செயலியை சோகோ கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது
வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிரைவசி பாலிசி மாற்றத்திற்கு பின் இந்த செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.
இவர்களின் தேடலுக்கு பதில் கொடுக்கும் வகையில், சோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உருவாகி இருக்கிறது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தை தென்காசியை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு என்பவர் துவங்கி இருக்கிறார். அந்த நிறுவனத்தின் அரட்டை செயலி தற்போது WhatsApp'ஐ வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்போம்
தற்போது Zoho நிறுவனம் Arratai செயலியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு Google play Store'ல் வெளியிட்டுள்ளது.இந்த செயலியின் Logoவையும் அரட்டை என்பதை குறிப்பிடுவதற்காக 'அ' என்றும் வைத்துள்ளனர்.
கடந்த 2021-ல் அரட்டை செயலியை சோஹோ நிறுவனம் வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த செயலி செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், அண்மைய நாட்களாக இந்த செயலியை அதிகளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் டவுன்லோடு செய்து வருகின்றனர்.
அரட்டையின் சிறப்புகள் என்ன?
1. இந்தியாவில் தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட செயலி.
2. மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு, நிறுவனங்களுக்கு தனிநபர் தகவல்கள் பகிரப்பட மாட்டாது.
3. ஒரு குழுவில் 1,000 பேர் உரையாட இயலும்.
4. 6 நபர் vஅரை வீடியோ கால் அழைப்பில் இணையலாம்.
செயலி உபயோக்கிக்க தேவையான அடிப்படை விபரங்கள் மட்டுமே சேகரிக்கப்படும்.இவை மற்ற நிறுவனங்களுக்கு பகிரப்பட மாட்டாது என கூறியுள்ளனர்.
- பாக்கெட் எனும் கிளவுட் ஸ்டோரேஜ் அம்சத்தை அரட்டை செயலி வழங்குகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது தேவையான மெசேஜ்கள், மீடியாக்கள் மற்றும் நோட்ஸ்களை Save செய்து கொள்ளலாம்.
- மீட்டிங்ஸ் ஆப்ஷன். இதன் மூலம் பயனர்கள் நேரடியாக அரட்டை செயலியில் இருந்தபடி நேரடியாக மீட்டிங்ஸை கிரியேட் செய்யவும், சக பயனர்கள் உருவாக்கிய மீட்டிங்ஸில் இணையவும், அதை திட்டமிடவும் முடியும்.
- இதில் மென்ஷன்ஸ் டேப் அம்சமும் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் முக்கிய மெசேஜ்களை மிஸ் செய்யாமல் பார்க்க முடியும்.
- வாடிக்கையாளர்களின் தகவல்களை மூன்றாவது நபருக்கு கண்டிப்பாக விற்க மாட்டோம் என சோஹோ தெரிவித்துள்ளது. அந்த வகையில் பயனர்களின் தரவுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள டேட்டா சென்டர்களில் சேமிக்கப்படும் என்றும் சோஹோ கூறியுள்ளது.
அரட்டை ஆப் டவுன்லோடு செய்ய
https://play.google.com/store/apps/details?id=com.aratai.chat&hl=en_SG
Tags: தொழில்நுட்பம்
