Breaking News

வழக்கறிஞர்களுக்கு ‘999’ விபத்து காப்பீட்டுத் திட்டம் - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிமுகம்!

அட்மின் மீடியா
0

வழக்கறிஞர்களுக்கு ‘999’ விபத்து காப்பீட்டுத் திட்டம் - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிமுகம்!



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல்களுக்காக புதிய ‘999’ விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த திட்டத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்த திட்டம் பார் கவுன்சில் மற்றும் நேஷனல் காப்பீட்டு நிறுவனம் இணைந்து உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுக்கு ரூ.999 மட்டும் செலுத்தி வக்கீல்கள் இதில் சேரலாம். விபத்து ஏற்பட்டால் மருத்துவ செலவுக்கு ரூ.3 லட்சம் வரை, விபத்தில் பலியானால் ரூ.25 லட்சம், உடல் உறுப்பு இழந்தால் ரூ.25 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்காக பார் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வக்கீல்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பார் கவுன்சில் தலைவர் பி. எஸ். அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback