Breaking News

பீகார் சட்டமன்ற தேர்தல்: 25 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த ஒவைசி முழு விவரம்

அட்மின் மீடியா
0

பீகார் சட்டமன்ற தேர்தல்: 25 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த ஒவைசி முழு விவரம்

பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 25 வேட்பாளா்களின் பட்டியலை அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். இதில், இருவா் முஸ்லிம் சமுதாயத்தைச் சாராதவா்களாவா்.

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 ம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 

பாஜக- ஜே.டியு.-வின் தேசிய ஜனநாயக கூட்டணி, மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது

இந்நிலையில் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் AIMIM கட்சி 100 தொகுதிகளுக்கு மேல் தனியாக போட்டியிடும் என அக்கட்சி தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத இருவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதில் அக்கட்சியின் பீகார் மாநில தலைவர் அக்தருல் இம்ரான் பெயரும் இடம் பிடித்துள்ளது. இக்கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது. இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு தூதுவிட்டது. ஆனால், தேஜஸ்வி யாதவ் பதில் அளிக்காததால் தனியாக போட்டியிடுகின்றது.

கடந்த தோ்தலில் 19 தொகுதியில் போட்டியிட்டு 5 இடங்களில் ஒவைசி கட்சி வெற்றி பெற்றது. அதில் 4 எம்எல்ஏக்கள் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் பின்னா் இணைந்தனா்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback