Breaking News

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 23 பேர் உயிரிழப்பு. வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஆந்திர மாநிலம், நெல்லுரை சேர்ந்த 35 பேர் பெங்களூருவில் நடைபெறவிருந்த உறவினரின் திருமணத்திற்காகத் தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் சென்றுள்ளனர்.

பேருந்து நெல்லூர் மாவட்டம், பெனேப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்தத் தீ விபத்தில் சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளார்கள்.



முதற்கட்ட தகவல்களின்படி, ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து அதிகாலை 3:30 மணியளவில் சாலையில் எதிரே வந்த இரு சக்கர வாகனம்மீது மோதி விபத்துகுள்ளாகி தீப்பொறிகள் உருவாகி தீப்பிடித்தது.

பேருந்தில் சுமார் 42 பேர் இருந்தனர். உடனே அவசரகால வெளியேற்றம் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து 12 பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினர். மேலும் பலர் தப்பிக்க முடியாததால் தீயில் கருகி உயிரிழந்தனர்.

காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1981603085777813681

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback