Breaking News

மும்பையில் பட்டபகலில் 17 குழந்தைகளை கடத்திய நபர் என்கவுண்டர் செய்து குழந்தைகளை காப்பாற்றிய போலீசார் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மும்பையில் பட்டபகலில் 17 குழந்தைகளை கடத்திய நபர் என்கவுண்டர் செய்து குழந்தைகளை காப்பாற்றிய போலீசார் முழு விவரம்


மும்பை நகரில் பொவாய் பகுதியில் உள்ள கட்டிடத்தில் உள்ள ஆர்.ஏ. ஸ்டூடியோவுக்கு நாடக ஒத்திகை நிகழ்ச்சிக்காக சிறுவர் சிறுமிகள் சிலர் சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர், அவர்களில் 17 குழந்தைகளை பணய கைதிகளாக கடத்தியுள்ளார்

அதன் பின்பு அந்நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தற்கொலை செய்வதற்கு பதிலாக, நான் ஒரு திட்டம் தீட்டினேன். அதன்படி, சில குழந்தைகளை பணய கைதிகளாக சிறை பிடித்து வைத்திருக்கிறேன் என்றார்.

சில எளிய, நல்ல மற்றும் நல்லொழுக்கம் சார்ந்த கோரிக்கைகளை நான் முன்வைத்திருக்கிறேன். ஏதேனும் சிறிய அளவிலான தவறான முடிவை நீங்கள் மேற்கொண்டாலும், அது என்னை வேறு வகையில் தூண்டி விட்டு விடும். இந்த இடத்தில் தீப்பற்ற வைத்து விடுவேன்.

எனக்கு பணம் தேவையில்லை. அதனை நான் கேட்கவும் இல்லை. நான் பயங்கரவாதியும் இல்லை என வீடியோவில் தெரிவித்து உள்ளார். 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இந்த சம்பவம் மதியம் 1.45 மணியளவில் நடந்துள்ளது. இதன்பின்பு, போலீசார் தரப்பில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

ஆனால், குழந்தைகளை விடுவிக்க அவர் மறுத்து விட்டார். இதனால், போலீசார் அதிரடியாக கழிவறை வழியே உள்ளே நுழைந்து அவரை என்கவுன்ட்டர் செய்தனர் 

அவர் ரோகித் ஆர்யா என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதற்கான காரணம் எதுவும் தெரிய வரவில்லை


Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback