இளைஞர்களே பயன்படுத்தி கொள்ளுங்கள் தொழில் செய்ய 15 லட்சம் வரை கடன் ரூ.3.75 லட்சம் மானியம் Tamilnadu Uyegp scheme
இளைஞர்களே பயன்படுத்தி கொள்ளுங்கள் தொழில் செய்ய 15 லட்சம் வரை கடன் ரூ.3.75 லட்சம் மானியம்T amilnadu Uyegp scheme
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
(Unemployed Youth Employment Generation Program)
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் (UYEGP) திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகை ரூ.15 இலட்சம் வரை வங்கியில் கடன் பெற்று அதற்கு 25% மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை பெறலாம்.
UYEGP திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாற்றுதிறனாளிகள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் பெற்றோர்களுக்கு கல்வி தகுதியில் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 45, சிறப்பு பிரிவினருக்கு (ஆதி திராவிடர், பழங்குடியினர், மகளிர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்று திறனாளிகள் மற்றும் திருநங்கையர்) 55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் அதிகபட்சம் ரூ.8 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தொழில் தொடங்க உள்ள தொழில் முனைவோர் தருமபுரி மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலை தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் வாங்கி விற்கலாம். மளிகை கடை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், ஸ்டேஷ்னரி கடை, மொபைல்/உபரிபாகங்கள் கடை, வாகன உதிரிபாகங்கள் வாங்கி விற்கும் உள்ளிட்ட தொழில் தொடங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.
www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், SIDCO தொழிற்பேட்டை, ஒட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533941, 8925533942 மற்றும் 04342-230892 ஆகிய எண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Tags: தமிழக செய்திகள்
