பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்…! ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்…! ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதால் அன்புமணியை பாமகவிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாகச் செயல் தலைவர் பதவியில் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய விளக்கம் அளிக்காததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.அதேசமயம் அன்புமணி உடன் சேர்ந்து செயல்பட்டு வரும் 10 பேரை மன்னிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
செல்லாது:-
அன்புமணி ராமதாசை நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பு கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும் அது தங்களை கட்டுப்படுத்த எனவும் வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக வழக்கறிஞர் கே.பாலு, “ராமதாஸ் அறிவிப்பு, விதிகளுக்கு எதிரானதுஅவரின் அறிவிப்புகள், பாமகவை கட்டுப்படுத்தாது. தலைவராக, அன்புமணி தொடர்ந்து செயல்படுவார். மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுவில் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பொதுக்குழு முடிவுகளை ஆகஸ்ட் 10ஆம் தேதி முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டோம்.
எங்களது விளக்கத்தை உரிய வகையில் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து, தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிக்காலத்தை பொதுக்குழு தீர்மானத்தின்படி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனரின் அறிவிப்புகள் எதுவுமே பாமகவை கட்டுப்படுத்தாது.
கட்சி விதிகளின்படியும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படியும் தலைவர் அன்புமணி, செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா தான். கட்சி நிறுவனர் ராமதாஸ் என்பதில் எந்த மாற்றமும் இல்லை,கட்சியின் அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர் நான் தான். உளவு பார்க்கும் பழக்கம் அன்புமணிக்கு கிடையாது. அன்புமணி உளவு பார்த்தார் என்று சொல்வது தவறு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். உயர் நீதிமன்றத்தில் கேவியட் முதல் நாங்கள்தான் தாக்கல் செய்திருக்க வேண்டும்” என்றார்.
Tags: அரசியல் செய்திகள்
