பெற்றோர்களே உஷார் - தண்ணீர் வாளிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் கே.என்.பேட்டையை பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி ஞானசவுந்தரி. இவருக்கு இரட்டை பெண் குழந்தை உள்ளது
இந்நிலையில் இன்று சிவசங்கரன் இளைய குழந்தையோடு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது மூத்த குழந்தை குனஸ்ரீ வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விளையாடிக் கொண்டு இருந்த நிலையில், அருகில் இருந்த தண்ணீர் வாளியில் தவறி விழுந்துள்ளது.
தண்ணீர் வாளி தொட்டி தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு நீர் தொட்டிசிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்தவர்கள் குழந்தையைக் காணவில்லை என்று தேடியபோது குழந்தை தண்ணீர் வாளியில் மூச்சு திணறி உயிரிழந்திருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாகக் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர்கள் கொண்டு சென்ற நிலையில், அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
தண்ணீர் வாளியில் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags: தமிழக செய்திகள்
