அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் - மனம் திறந்து பேசிய செங்கோட்டையன் முழு விவரம்
அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் - மனம் திறந்து பேசிய செங்கோட்டையன்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டம் கோபியில் கட்சி அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி காலை 9 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்தித்து, மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை செய்தியாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.
இன்று செய்தியாளர்களைச் சந்திந்த செங்கோட்டையன்:-
6 அமைச்சர்கள் சென்று , பிரிந்து போனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தினோம் அதை எதையும் கேட்க அவர் தயாராக இல்லை என செங்கோட்டையன் பகீர் குற்றச்சாட்டு
பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன்அறிவிப்பு
தனது கோரிக்கைகளைப் பரிசீலித்தால் மட்டும்தான் இனி எடப்பாடி பழனிச்சாமி உடன் பரப்புரைகளின் பங்கேற்பேன் ,அனைவரையும் ஒன்று சேர்த்தால் மட்டும்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும்
கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை
ஜெயலலிதா அவர்கள் இறப்புக்கு பிறகு இரண்டு முறை எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன ஆனால் கட்சி உடைந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் நான் அதனை ஏற்கவில்லை
அதிமுக என்னும் பேரியக்கம் உடைந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பல தியாகங்களைச் செய்து இருக்கிறேன்.தலைவர் எம்ஜிஆர் க்கு பிறகு ஆளுமை மிக்க தலைமை கட்சிக்கு தேவைப்படுகிறது நீங்கள் தான் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என நாங்கள் அனைவரும் ஜெயலலிதா அவர்களிடம் கேட்டுக் கொண்டோம் அவரும் கட்சி பொறுப்பை ஏற்ற பிறகு ஆட்சியையும் மிகச் சிறப்பாக நடத்தினர்
சத்தியமங்கலம் தொகுதியில் என்னை எம் ஜி ஆர் போட்டியிட சொன்னார் அந்த தொகுதி எனக்கு புதிதானது அங்கு நான் என்ன செய்ய முடியும் என கேட்டேன் என் பெயரை சொல் நீ வெற்றி பெறுவாய் என எம் ஜி ஆர் என்னிடம் சொன்னார்
எம் ஜி ஆர் காலத்தில் இருந்து கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து வருகிறேன்: செங்கோட்டையன் பேச்சுசாதாரண கிளை செயலாளராக தான் எனது வாழ்க்கையை தொடங்கினேன்பிறகு முக்கிய பொறுப்புகளை எனக்கு கொடுத்து தலைவர்கள் அளித்து அழகு பார்த்தனர் என செங்கோட்டையன் பேச்சு
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
