ஷோருமில் கார் வாங்கி டயரில் எலுமிச்சைபழம் வைத்ததால் அடுத்து நடந்த விபரீதம் வீடியோ பாருங்க
இந்தியாவின் தலைநகர் டில்லியில் பிரதீப் என்ற வாலிபர் தன் மனைவிக்குப் பிறந்தநாள் பரிசாகப் புதிய காரை முன்பதிவு செய்திருந்தார். அதனை எடுத்துச் செல்லக் காஜியாபாத் எல்லையை ஒட்டி அமைந்துள்ள டில்லி ப்ரீத் விஹார் பகுதியில் உள்ள, 'மஹிந்திரா' கார் விற்பனையகத்துக்கு சென்றார்.
அவர்கள் ‘புக்’ செய்திருந்த கார், ஷோரூமின் முதல் மாடியில் வெளியே சாலையைப் பார்த்து நின்று கொண்டிருந்தது. முன்பக்கம் கண்ணாடிச்சுவர் இருந்தது. காரை எடுப்பதற்கு முன்பு நல்ல சகுனத்துக்காகக் காரின் டயரில் எலுமிச்சைப் பழத்தை வைத்து நசுக்க வேண்டும் என்பதற்காக, அவர் ஆக்சிலேட்டருக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்து இயக்கிய போது ஜீப், முதல் தளத்தின் கண்ணாடி சுவரை உடைத்துக் கொண்டு தரை தளத்தில் விழுந்தது.
மஹிந்திரா விற்பனையகத்தின் எதிரே இருந்த கட்டடத்தின் கார் நிறுத்தும் இடத்தில் தலைகீழாக விழுந்த புத்தம் புதிய கார் நொறுங்கியது.அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.ஜீப்பில் இருந்த 'ஏர் பேக்' திறந்து கொண்டதால், அதில் பயணித்த மாணி பவார், அவர் கணவர் மற்றும் மஹிந்திரா நிறுவன ஊழியர் விகாஸ் ஆகிய மூவரும் காயங்களுடன் தப்பினர்.
A newly purchased Mahindra Thar crashed by a girl through a Laxmi Nagar showroom glass wall, Delhi During a traditional lemon-squeezing ritual, she accidentally pressed the accelerator, causing the vehicle to fall from the first floor
வீடியோ பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-
https://x.com/TimesAlgebraIND/status/1965596086296559879
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
