வால்பாறை செல்ல இ-பாஸ் எடுக்கனும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
வால்பாறை செல்ல இ-பாஸ் எடுக்கனும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
வால்பாறையிலும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.!ஊட்டி, கொடைக்கானல் போன்று வால்பாறையிலும் நவம்பர் 1 முதல் இபாஸ் நடைமுறையை அமல்படுத்த, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வால்பாறையில் குவிந்து வருவதாக நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், "ஊட்டி, கொடைக்கானலை விட, வால்பாறை, டாப் சிலிப், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியன சுற்றுச்சூழல் ரீதியாக தீவிரமான பகுதிகள் ஆகும்.
அதனால், வால்பாறை செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து, இ பாஸ் வழங்கும் நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்
வால்பாறை செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பது குறித்தும் சோதனை நடத்த வேண்டும்" என உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்
