கத்தார் தலைநகர் தோகா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் வைரல் வீடியோ
கத்தார் தலைநகர் தோகா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் வைரல் வீடியோ
கத்தார் தலைநகரில் இஸ்ரேல் வான் வழி தாக்குதல்கத்தார் தலைநகரில் இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியுள்ளது
2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ஹமாஸ் படையினருக்கு கத்தார் ஆதரவு அளித்து வருகிறது. கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்தப்படி, இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுதலை உள்ளிட்டவை குறித்து எகிப்து மற்றும் கத்தார் அரசின் மூலம் இஸ்ரேலுடன் ஹமாஸ் படையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கத்தார் மீது இஸ்ரேல் திடீரென வான் வழி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள ஹமாஸ் படையின் அலுவலகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு கத்தார் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர் உயிர்தப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் தற்போது அரபு நாட்டில் தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1965594869428355309
Tags: வெளிநாட்டு செய்திகள்