Breaking News

9ம் தேதி மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பு... செங்கோட்டையன் அடுத்த அதிரடி

அட்மின் மீடியா
0

நாளை மறுநாள் 9ம் தேதி மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பு... செங்கோட்டையன் அடுத்த அதிரடி



செங்கோட்டையன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவரை அதிமுக பொதுசெயலாளர் பொறுப்புகளிலிருந்து விடுவித்துள்ளார். இந்நிலையில் செங்கோடையன் மறுபடியும் நாளை மறுநாள் செப்டம்பர் 9 ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

செப்டம்பர் 5ல், கட்சியிலிருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி கே. பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து எடப்பாடி அவரைக் கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கிய நிலையில், செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்

எடப்பாடியின் முடிவுக்கு எதிராக, செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கட்சி பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர். இது கட்சிக்குள் பிளவை ஆழப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு, அதிமுகவின் உட்கட்சி இயக்கவியலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback