Breaking News

இந்த ஆண்டின் சந்திர கிரகணம் 7ம் தேதி 8-ம் தேதி நடைபெற உள்ளது .Lunar Eclipse 2025

அட்மின் மீடியா
0

2025 ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி 7 ஆம் தேதி காலை 9:57 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை 1:26 வரை இருக்கும். 

சந்திர கிரகணத்தின் முழு தாக்கம் நள்ளிரவு 12.28 மணி முதல் 1.56 வரை இருக்கும். 

வானவியலின் அடிப்படையில்சந்திர கிரகணம் என்றால் என்ன

சூரியன், பூமி, சந்திரன்., இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்த நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம். சூரியின் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் நிலவு தெரியாது. 

இதே போல், சூரியனை நிலவு கடந்து செல்லும் போது, சிறிய அளவில் சூரியன் மறைக்கப்படுகிறது. இதை சூரிய கிரகணம் என்கிறோம்.

தமிழகத்தில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியுமா:-

இந்தியாவில் வட இந்தியா, தென் இந்தியாவில் சென்னை , கோவை, திருச்சி பெங்களூர் உட்பட பல பகுதிகளில் முழு சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.

சந்திர கிரகண நேரம்:-

ஆவணி மாதம் 22-ஆம் தேதி (07.09.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணி நள்ளிரவு 1.26 மணி வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்திய நேரப்படி இரவு 9.56 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் இரவு 10.59 மணியளவில் தொடங்குகிறது. கிரகண மத்யம நேரம் இரவு 11.41 மணியாகும் முழு சந்திர கிரகணமும் நள்ளிரவு 12.23-க்கும், கிரகணம் முழுவதுமாக நள்ளிரவு 1.26 மணிக்கு நிறைவடைகிறது.

சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா:-

இந்த சந்திர கிரகணத்தை தொலைநோக்கி, பைனாகுலர் அல்லது வெறும் கண்ணால் கூட நாம் பார்க்கலாம். 

வானம் தெளிவாக இருந்தால் பார்வையாளர்கள் வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம்.இதுபோன்ற இரவில் ஏற்படுகின்ற அரிய வானியல் நிகழ்வுகளை உற்று நோக்குவதன் மூலமாக பல வானியல் கருத்துக்களை குழந்தைகள் தெரிந்து கொள்ளமுடியும்.

இந்த அரிய நிகழ்வினை கண்டுகளிக்க மறந்து விடாதீர்கள். அடுத்த சந்திர கிரகணம் டிசம்பர் 2028-ல்தான் நிகழும் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback