Breaking News

எடப்பாடியுடன் மோதலா? அதிமுகவில் இருந்து விலகலா? மனம் திறந்து வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு மனம் திறந்து பேசவுள்ளேன்” அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

அட்மின் மீடியா
0

மனம் திறந்து வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு மனம் திறந்து பேசவுள்ளேன்” அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு



செப்.5-ம் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன் என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் இருந்து வருகிறது. 

இந்நிலையில், இன்று காலைச் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டம் கோபியில் கட்சி அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி காலை 9 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்தித்து, மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை செய்தியாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.

கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டமா? என்ற கேள்விக்குச் செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளது என்று மட்டும் தெரிவித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி தொடர்கிறதா? என்ற கேள்விக்குச் சிரித்து முகத்துடன் கையெடுத்து கும்பிட்டுச் சென்றார். 

Tags: அரசியல் அரசியல் செய்திகள்

Give Us Your Feedback