சென்னையில் விஷப்பூச்சி கடித்து 19 வயதான இளம்பெண் பலி
சென்னையில் விஷப்பூச்சி கடித்து 19 வயதான இளம்பெண் பலி
சென்னையில் உள்ள ஆவடியை அடுத்த கண்ணபாளையம், மேட்டுப்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா, வயது 19 கடந்த 29ம் தேதி துாங்கி எழுந்தபோது, உடலில் பூச்சி கடித்து அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்போது வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்திருக்கிறார். இதனால் பதறிய அவரின் குடும்பத்தார், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருவேற்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு ஒரு நாள் முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் அடையாததால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால், அங்கும் சிகிச்சை பலனின்றி சர்மிளா மரணமடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
